×

கோவிந்தபுத்தூர் கிராமத்தில் தெருவில் ஹாயாக வலம் வந்த 10 அடி நீள முதலை மக்கள் அலறியடித்து ஓட்டம்

தா.பழூர், ஜன.9: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இங்கு தற்போது மழைநீர் நிறைந்து கிடப்பதால் முதலைகள் அதிகம் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை கோவிந்தாபுத்தூர் மாரியம்மன் கோவில் வடக்குத் தெருவில் சாலையோரம் 10 அடி நீளமுள்ள ஒரு முதலை ஹாயாக வலம் வந்தது. இதைக்கண்ட கிராம மக்கள் பயந்து தலைதெரிக்க ஓடினர். மக்கள் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் நீண்ட தடிகளை கொண்டு வந்து அந்த முதலையின் கழுத்து பகுதியில் வைத்து அமுத்தி கயிறுகளை கொண்டு கட்டினர். பிடிபட்ட முதலை 150 கிலோ எடை, சுமார் 10 அடி நீளம் கொண்டது. பின்னர் இந்த முதலை பிடிபட்டது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனக்காப்பாளர் பாலு மற்றும் வனகாவலர்கள் ராஜேந்திரன், முருகேசன் ஆகியோர் முதலையை மீட்டு கொள்ளிடம் அணைக்கரை கீழணையில் முதலையை விட்டனர்.

Tags : village ,Govindaputhur ,street ,
× RELATED சாலையில் நாய் குறுக்கே வந்ததால்...